விமான கட்டணத்தை உயர்த்த ஜெட் ஏர்வேஸ் திட்டம்
விமான கட்டணத்தை உயர்த்த ஜெட் ஏர்வேஸ் திட்டம்
விமான கட்டணத்தை உயர்த்த ஜெட் ஏர்வேஸ் திட்டம்
ADDED : ஆக 18, 2011 02:46 PM
மும்பை : தனியார் துறை விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது உள்நாட்டு விமான கட்டணத்தை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
அதற்கு பதிலாக குறைந்த செலவிலான சர்வதேச விமானங்களை அதிகளவில் அறிமுகம் செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தனது குறைந்த கட்டணத்திலான சேவைக்கு ஜெட் கொனெக்ட் மற்றும் ஜெட்லைட் என பெயரிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 19வது வருட பொதுக் கூட்டத்தில் பேசிய நிறுவன தலைமை அலுவலர் சுதீர் ராகவன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.