/உள்ளூர் செய்திகள்/மதுரை/110 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 4 பேர் கைது110 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 4 பேர் கைது
110 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 4 பேர் கைது
110 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 4 பேர் கைது
110 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 4 பேர் கைது
ADDED : அக் 04, 2011 12:53 AM
மதுரை : ஆந்திரா மாநிலம் துதிபள்ளியில் இருந்து, மதுரைக்கு இனோவா காரில் கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
110 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இனோவா கார் (டிஎன். 04 பி 1746) நிற்காமல் சென்றது. உடனடியாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வாடிப்பட்டி போலீசார் ரயில்வே கேட் அருகில் காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் 55 பண்டல்களாக 110 கிலோ கஞ்சா இருந்தது. கார் டிரைவர் மதுரை சம்மட்டிபுரம் வெங்கடேஷ் பாபு, 34, கணவாய்பட்டி தெய்வேந்திரன்,44, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மாலண்னா,44, பந்தண்ணா, 36, கைது செய்யப்யப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் கூறியதாவது: ஆந்திரா மற்றும் ஒரிசா எல்லைப் பகுதியான துதிபள்ளி பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கஞ்சா கடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட கும்பல் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தென் மாவட்டங்களில் கஞ்சா சப்ளை செய்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய மதுரையை சேர்ந்த மதியழகன், கீரிப்பட்டி குமார், பால்பாண்டி, போலியம்பட்டி வீரணன் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறிமுதலாவ கஞ்சாவின் மதிப்பு ரூ.35 லட்சம், என்றார். டி.எஸ்.பி., குமார் உடனிருந்தார்.


