/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அன்னா ஹசாரேவை ஆதரித்து பண்ருட்டியில் ஊர்வலம்அன்னா ஹசாரேவை ஆதரித்து பண்ருட்டியில் ஊர்வலம்
அன்னா ஹசாரேவை ஆதரித்து பண்ருட்டியில் ஊர்வலம்
அன்னா ஹசாரேவை ஆதரித்து பண்ருட்டியில் ஊர்வலம்
அன்னா ஹசாரேவை ஆதரித்து பண்ருட்டியில் ஊர்வலம்
ADDED : ஆக 26, 2011 12:09 AM
பண்ருட்டி : சமூக சேவகர் அன்ன ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பண்ருட்டியில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம் காந்தி வீதி வழியாக பண்ருட்டி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க பொது செயலர் மோகன கிருஷ்ணன், செயல் செயலர்கள் ராஜேந்திரன், பிச்சமுத்து, கணேசன், ஜெயமூர்த்தி, தேவநாதன், கருணாகரன், பிரகாஷ், ரோட்டரி சங்க தலைவர் மதன்சந்த், திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளி தாளாளர் சேரன், சக்தி ஐ.டி.ஐ.முதல்வர் தேவநாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க செயலர் வேலாயுதம் மற்றும் பள்ளி, ஐ.டி.ஐ., மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


