/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்
நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்
நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்
நகராட்சி தலைவருக்கு 25 பேர் மனு தாக்கல்
ADDED : செப் 29, 2011 10:16 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சியில் தலைவர் பதவிக்கு 25
பேரும், கவுன்சிலர் பதவிக்கு 280 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒரு தலைவர் பதவி, 33 வார்டு கவுன்சிலர்
பதவிக்கு 17ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட அரசியல்
கட்சியினர் மற்றும் சுயேட்சி வேட்பாளர்கள் அதிகளவில் வேட்பு மனு தாக்கல்
செய்துள்ளனர். கடந்த 27ம் தேதி தலைவர் பதவிக்கு மூவரும், கவுன்சிலருக்கு 63
பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று கடைசி நாள் என்பதால்,
அதிகமானவர்கள் மனு தாக்கல் செய்தனர். தலைவருக்கு மொத்தமாக 25 பேரும்,
கவுன்சிலருக்கு 280 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வரும் 3ம்
தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.