Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தகல் கோவில் வேறு இடத்துக்கு மாற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தகல் கோவில் வேறு இடத்துக்கு மாற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தகல் கோவில் வேறு இடத்துக்கு மாற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தகல் கோவில் வேறு இடத்துக்கு மாற்றம்

ADDED : ஜூலை 17, 2011 02:08 AM


Google News
சேந்தமங்கலம்: பொட்டணம் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கல் பிள்ளையார் கோவில் அகற்றப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சேந்தமங்கலம் அடுத்த பொட்டணம், ரெட்டியார் வீதியில் கல் பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலை, பல ஆண்டுகளாக ஒரு சமூகத்தினர் வழிபட்டு வந்தனர். அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் வெளியூரில் வசித்து வந்ததால், முறையான பராமரிப்பின்றி கல் கோவில் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது.இந்நிலையில், இந்த கோவிலால் இரு சமூகத்தினருக்கு இடையே கோவில் திருவிழாவின் போது சீரியல் லைட் கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்து வந்தது. அதனால், கோஷ்டி மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இது தொடர்பாக தாசில்தார் திருஞானம் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், 'போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கல் கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுவது' என, முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று ஆர்.ஐ.,பெரியசாமி, வி.ஏ.ஓ., சித்ரா முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கோவில் அகற்றப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.

அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில், போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us