ADDED : ஜூலை 23, 2011 01:01 AM
நத்தம் : நத்தம் பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களாலும், தாழ்வான கம்பிகளாலும் உயிர்ப்பலி ஏற்படுகிறது.
நத்தம் பேரூராட்சி, செந்துறை,பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி, சேத்தூர், சிரங்காட்டுப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்வாகவும், கம்பிகள் தொய்வாகவும் உள் ளன.
காற்று அடிக்கும் போது கம்பங்கள் சாய்ந்து விடுகின்றன. தோட்டங்களுக்கு செல்வோர் மின்கம்பிகளை மிதித்து உயிரிழக்கின்றனர். உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகே தற்காலிகமாக சரிசெய்கின்றனர். ஆடி மாதத்தில் காற்று பலமாக வீசும். நத்தம், சாணார்பட்டி ஒன்றியங்களில் ஆபத்தான மின் கம்பங்களையும், கம்பிகளையும் சரி செய்ய வேண்டும்.