போலி பத்திரம் தயாரித்து மிரட்டுவதாக விழுப்புரம் எஸ்.பி.,யிடம் புகார்
போலி பத்திரம் தயாரித்து மிரட்டுவதாக விழுப்புரம் எஸ்.பி.,யிடம் புகார்
போலி பத்திரம் தயாரித்து மிரட்டுவதாக விழுப்புரம் எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : ஜூலை 12, 2011 12:30 AM
விழுப்புரம் : 'போலி பத்திரம் தயாரித்து, தனக்குரிய இடத்தில் ஒருவர் பிரச்னை செய்வதாகக் கூறி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று, ஒருவர் புகார் அளித்தார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாமந்தூர் சாலையைச் சேர்ந்தவர் சையத் உமர், 53. இவர் கடந்த 2004ம் ஆண்டு மாமந்தூர் சாலையில், 1,300 சதுர அடி இடத்தை, சையத் ஹாசீம் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். இந்த இடத்தில், நேற்று முன்தினம் வீடு கட்டும் பணியைத் துவங்க சென்ற சையத் உமரை, அதே பகுதியைச் சேர்ந்த ஷா அலாம் தடுத்துள்ளார். இந்த இடத்தை கடந்த 1995ம் ஆண்டு சையத் ஹாசீம் என்பவரின் தந்தை கோரிபீபீ என்பவரிடமிருந்து தான் வாங்கியுள்ளதாகக் கூறி, பிரச்னை செய்துள்ளார்.
இது பற்றி சையத் உமர் கேட்ட போது, தான் அந்த இடத்தை சட்டப்படி விற்பனை செய்துள்ளதாக, சையத் ஹாசீம் கூறியுள்ளார். இந்நிலையில், தனது இடத்தின் மீது ஷா அலாம் போலி பத்திரம் தயாரித்து மிரட்டுகிறார் என, விழுப்புரம் எஸ்.பி., சேவியர் தனராஜிடம், நேற்று மாலை சையத் உமர் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து எஸ்.பி., உத்தரவின்படி, மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.