/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தரமற்ற பாலங்கள் மீண்டும் "பூச' உத்தரவுதரமற்ற பாலங்கள் மீண்டும் "பூச' உத்தரவு
தரமற்ற பாலங்கள் மீண்டும் "பூச' உத்தரவு
தரமற்ற பாலங்கள் மீண்டும் "பூச' உத்தரவு
தரமற்ற பாலங்கள் மீண்டும் "பூச' உத்தரவு
ADDED : ஜூலை 24, 2011 09:15 PM
குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பகுதியில் ஆய்வு செய்த கலெக்டர் நாகராஜன், புதிய பாலத்தை மீண்டும் பூச உத்தரவிட்டார்.
வடுகம்பாடி ஊராட்சி நல்லி நகர் பகுதியில் நடைபெற்ற, நூறு நாள் வேலை திட்ட பணி, குஜிலியம்பாறை மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார். குஜிலியம்பாறையில், நபார்டு திட்டத்தின் கீழ், கரூர்- திண்டுக்கல் ரோட்டில் 49 லட்ச ரூபாய்; பாளையத்தில் 83 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பாலங்களை பார்வையிட்டார்.
பணி தரமற்று இருப்பதாக கருதிய கலெக்டர், கான்ட்ராக்டர், பொறியாளர்களை கண்டித்தார். பாலத்தில் மீண்டும் 'பூச்சு' பணிகளை துவக்க உத்தரவிட்டார். ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கமிஷனர்கள் சங்கர், சாவித்திரி, பொறியாளர் அசோகன் உடன் இருந்தனர்.