ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பலி போர்வெல் அமைத்த 4 பேர் கைது
ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பலி போர்வெல் அமைத்த 4 பேர் கைது
ஆழ்துளை கிணற்றில் சிறுவன் பலி போர்வெல் அமைத்த 4 பேர் கைது
ADDED : செப் 09, 2011 06:18 AM
திருநெல்வேலி:நெல்லை அருகே ஆழ்குழாய் கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து இறக்க காரணமாக இருந்த, போர்வெல் லாரி மேலாளர் உள்ளிட்டநால்வரை போலீசார் கைது செய்தனர்.
இருவரை தேடிவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள கைலாசநாதபுரத்தில் கோயில் அருகே ஆழ்குழாய் கிணறு தோண்டப்பட்டது. 200 அடி தோண்டிய நிலையில் தண்ணீர் இல்லாததால் அப்படியே விட்டுவிட்டனர். நேற்று முன்தினம் காலையில் மூடாமல் கிடந்த குழியில், 4வயது சிறுவன் சுதர்சன் விழுந்தான். காலையில் விழுந்த சிறுவனை மீட்க தீயணைப்புதுறையினர் போராடினர்.
இரவு ஒரு மணிக்கு சிறுவன் உடல் மீட்கப்பட்டது. நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று பிரேதபரிசோதனைக்கு பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்திற்கு காரணமான போர்வெல் லாரி டிரைவர் கள்ளக்குறிச்சி கண்ணன், போர்வெல் ஆபரேட்டர் கண்ணன், போர்வெல் மேலாளர் விஜயகுமார், புரோக்கர்கள் முருகன் ஆகியோர் செய்து கைது செய்யப்பட்டனர். லாரி உரிமையாளர் நாமக்கல் கந்தசாமி, புரோக்கர் சின்னத்துரை ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.