/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிவகாசியில் ரூ.5 கோடி பட்டாசுகள் லாரி ஸ்டிரைக்கால் தேக்கம்சிவகாசியில் ரூ.5 கோடி பட்டாசுகள் லாரி ஸ்டிரைக்கால் தேக்கம்
சிவகாசியில் ரூ.5 கோடி பட்டாசுகள் லாரி ஸ்டிரைக்கால் தேக்கம்
சிவகாசியில் ரூ.5 கோடி பட்டாசுகள் லாரி ஸ்டிரைக்கால் தேக்கம்
சிவகாசியில் ரூ.5 கோடி பட்டாசுகள் லாரி ஸ்டிரைக்கால் தேக்கம்
ADDED : ஆக 21, 2011 01:55 AM
சிவகாசி : லாரி ஸ்டிரைக்கால், வடமாநிலங்களுக்கு செல்லும் ரூ.5 கோடி பட்டாசுகள், சிவகாசியில் தேங்கியுள்ளன.
சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. தீபாவளியால் பட்டாசு ஏற்றி செல்லும் லாரிகளின் எண்ணிக்கை உயர்ந்து, தினம் 50 முதல் 60 லாரிகள் சென்றன. லாரி ஒன்றில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 14 டன் பட்டாசுகளும் கொண்டு செல்லப்பட்டன. இதன் மூலம் தினம் 800 டன் பட்டாசுகள் வெளியேறின. இந்நிலையில், லாரி ஸ்டிரைக்கால் பட்டாசு லாரிகள் அனைத்தும் சிவகாசி சுற்றுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லோடு ஏற்றுவதற்கு நாமக்கல், கரூர், சேலத்திலிருந்து வரவேண்டிய லாரிகளும் வரவில்லை. இதனால், சிவகாசியில் ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேங்கி உள்ளன. இது போல் தீப்பெட்டி பண்டல்களும் முடங்கின. ஆனால் பட்டாசு உற்பத்தியில் எந்த வித பாதிப்பு இல்லாமல் நடந்து வருகிறது. அகில இந்திய பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜயகுமார் கூறுகையில், '' பட்டாசு விபத்துக்களால் அதிகாரிகள் கெடிபிடி கடுமையாக உள்ளது. இதனால் உற்பத்தி குறைந்து ,விலையும் உயர்ந்துள்ளது. ஸ்டிரைக் தொடங்கி ஒரிரு நாட்கள்தான் ஆவதால், ஓரளவுதான் பட்டாசுகள் தேங்கி உள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஸ்டிரைக் தொடர்ந்தால், பெரிய அளவில் பட்டாசு தேங்கி பாதிப்பு ஏற்படும்,'' என்றார். டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், '' தீபாவளிக்கு 60 நாட்கள் இருப்பதால், இம் மாத இறுதியிலே அதிக லோடுகள் வெளியேற வேண்டும். ஸ்டிரைக்கால் லோடு ஏற்றி செல்ல லாரிகள் வரவில்லை,'' என்றார்.