/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வார்டு உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி : கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்புவார்டு உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி : கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு
வார்டு உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி : கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு
வார்டு உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி : கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு
வார்டு உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி : கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு
ADDED : ஆக 29, 2011 10:15 PM
விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே தீக்குளிப்பு போராட்டம் நடத்திய ஊராட்சி வார்டு உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி தாலுகா எலவடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன், 41. இவர் ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். எலவடி ஊராட்சியில் தேசிய ஊராக வேலைத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முதல்வர், கவர்னர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லட்சுமணன் புகார் செய்தார்.
இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று பகல் 12.30 மணியளவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகம் முன் லட்சுமணன் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொள்ள முயன்ற அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தகவலறிந்த கலெக்டர் அலுவலக மேலா ளர் சேதுராமன், குற்றவியல் அலுவலக பொதுமேலாளர் குமாரபாலன் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் ஆகியோர் விசாரணை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு முயன்ற லட்சுமணன் கூறுகையில், எலவாடி ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து புகார் செய்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் பெரியண்ணன், துணைத் தலைவர் சின்னதம்பி, ஊராட்சி உதவியாளர் பாலு, மக்கள் நலப்பணியாளர் வத்சலா ஆகியோர் சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.