ADDED : ஆக 24, 2011 12:22 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை பணி
துவங்குவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் நாகராஜன் தலைமையில்
நடந்தது.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பத்மா, தேர்தல் தாசில்தார்
பாலசுப்பிரமணியன், திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் லட்சுமி, ஆர்.டி.ஓ.,
தாசில்தார்கள், தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வரும் 2012 ஜன., 1 ல்,
18 வயது தகுதி பெறும் புதிய வாக்காளர்களிடம் விண்ணப்பங்கள் பெறுவது,
வாக்காளர் சேர்க்கைக்கு அக்டோபர் மாத சனி, ஞாயிறுகளில் சிறப்பு முகாம்கள்
நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.