/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாசிப்பு ஆர்வம் மாணவர்களுக்கு அவசியம் முதன்மை கல்வி அலுவலர் பேச்சுவாசிப்பு ஆர்வம் மாணவர்களுக்கு அவசியம் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
வாசிப்பு ஆர்வம் மாணவர்களுக்கு அவசியம் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
வாசிப்பு ஆர்வம் மாணவர்களுக்கு அவசியம் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
வாசிப்பு ஆர்வம் மாணவர்களுக்கு அவசியம் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
ADDED : ஆக 14, 2011 02:53 AM
திருப்பூர் : அறிவுசார்ந்த புதிய புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும்; வாசிப்பு ஆர்வம் மாணவர்களுக்கு அவசியம் என, முதன்மை கல்வி அலுவலர் பேசினார். நூலக தந்தை ரங்கநாதன் பிறந்த நாள் விழா மற்றும் நூலகர் தின விழா திருப்பூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட நூலக அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து ரங்கநாதன் படத்தை திறந்து வைத்தார்.
அவர் பேசியதாவது:பள்ளிகளில் உள்ள நூலகங்களில் புதிய புத்தகங்கள் வருவது குறைவாக உள்ளது. பொது நூலகத் துறை நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் அதிகளவில் வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு தேவையான நல்ல கதைகள் அடங்கிய புத்தகங்கள், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் அறிவு சார்ந்த, பாடங்கள் தொடர்பான புத்தகங்கள் புதிது புதிதாக நூலகங்களுக்கு வருகின்றன. பள்ளி மாணவர்களை அதிகளவில் இது போன்ற பொது நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்த்து புதிய புத்தகங்களை வாசிக்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்; வாசிப்பு ஆர்வம் மாணவர்களுக்கு அவசியம். பாடங்கள் தொடர்பான மற்றும் அறிவியல் ரீதியான புதிய புத்தகங்களை பள்ளிகள் மூலமாக நூலகங்களிலிருந்து பெற்று பள்ளிகளில் மாணவர்களை படிக்க வைக்க
நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.மாவட்ட மைய நூலகர் மாதேஸ்வரி நன்றி கூறினார்.