/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பி.எட்., பதிவு செய்வதில் காலதாமதத்தால் வாக்குவாதம்பி.எட்., பதிவு செய்வதில் காலதாமதத்தால் வாக்குவாதம்
பி.எட்., பதிவு செய்வதில் காலதாமதத்தால் வாக்குவாதம்
பி.எட்., பதிவு செய்வதில் காலதாமதத்தால் வாக்குவாதம்
பி.எட்., பதிவு செய்வதில் காலதாமதத்தால் வாக்குவாதம்
ADDED : செப் 06, 2011 01:07 AM
கடலூர்: கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பி.எட்., பதிவு செய்வதில் தாமதம் ஆனதால் பதிவு செய்ய வந்தவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 13ம் வெளியிடப்பட்ட பி.எட்., தேர்வு முடிவில் கடலூர் மாவட்டத்தில் 2,400 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த 3ம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. பி.எட்., முடித்தவர்கள் நேற்று காலை முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய குவியத் துவங்கினர். பதிவு செய்வதில் மாலை வரை தாமதம் ஏற்பட்டதால் பதிவு செய்ய வந்தவர்கள் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர். இதுகுறித்து வேலைவாய்ப்பு அதிகாரி செந்தில்குமார் கூறுகையில், 'ஆன்லைன்' சரியாக இயங்காதது மற்றும் மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களில் குறைபாடு இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. 3ம் தேதி 250 பேரும், இன்று (நேற்று) 1,500 பேரும் பதிவு செய்துள்ளனர்.' என்றார்.மாணவ, மாணவிகள் கூறுகையில், 'பி.எட்., முடித்தவர்கள் தங்கள் பதிவை கடந்த 3ம் தேதியும், மறுநாள் 4ம் தேதியும் 'ஆன்லைனில்' பதிந்து கொள்ளலாம் என முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. தெரிந்த சிலர் மட்டுமே பதிவு செய்தனர். இதனால் முன்னுரிமை கிடைக்கவில்லை' என்றனர்.