Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பள்ளி மாணவர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டி

பள்ளி மாணவர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டி

பள்ளி மாணவர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டி

பள்ளி மாணவர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டி

ADDED : செப் 16, 2011 12:46 AM


Google News
விழுப்புரம்:மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கேரம் விளையாட்டு போட்டி நாளை (17ம் தேதி) நடக்கிறது.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கேரம் விளையாட்டு போட்டி நாளை (17ம் தேதி) காலை 8 மணிக்கு கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடக்கிறது.ஜூனியர் பிரிவில் மழலை வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையும், சீனியர் பிரிவில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்போர் வயது, வகுப்பு சான்றிதழ்களை பள்ளியில் இருந்து பெற்று வர வேண்டும்.இளநிலை ஒன்றையர் பிரிவில் முதலிடத்திற்கு 500 ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 250 ரூபாயும், மூன்றாமிடத்திற்கு 125 ரூபாயும், இளநிலை இரட்டையர் மற்றும் முதுநிலை ஒன்றையர் பிரிவில் முதலிடத்திற்கு 1000 ரூபாய், இரண்டாமிடத்திற்கு 500 ரூபாய், மூன்றாமிடத்திற்கு 250 ரூபாய் பரிசளிக்கப்படும்.முதுநிலை இரட்டையர் பிரிவில் முதலிடத்திற்கு 2000 ரூபாய், இரண்டாமிடத்திற்கு 1000 ரூபாய், மூன்றாமிடத்திற்கு 500 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதலிடம் பெற்றவர்கள் அரசு செலவில் மாநில போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us