/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு கிராம மக்கள் எதிர்ப்புஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு கிராம மக்கள் எதிர்ப்பு
ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு கிராம மக்கள் எதிர்ப்பு
ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு கிராம மக்கள் எதிர்ப்பு
ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு கிராம மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 23, 2011 10:50 PM
தேவகோட்டை : தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தொடர்ந்து மூன்று முறை ஊராட்சி
தலைவர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு அப்பகுதி மக்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
வெள்ளிக்கட்டி ஊராட்சி தலைவர் பதவி 2001, 2006 தேர்தலிலும், தற்போதும்
தொடர்ச்சியாக ஆதி திராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த
ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இரண்டு முறைக்கு
ஒரு முறை இட ஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என விதி இருப்பதால் இது குறித்து
கடந்த 16 ந்தேதி மாநில தேர்தல் ஆணையத்திற்கும், கலெக்டருக்கும் இப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்தனர். எந்தவித பதிலும் வரவில்லை. தேர்தல் அறிவிப்பு
வந்ததை தொடர்ந்து அந்த ஊராட்சியில் உள்ள மக்கள் ஒன்றிய அலுவலகத்தை
முற்றுகையிட்டனர். ஆணையாளரிடம் தங்கள் கோரிக்கைகளை விளக்கினர்.
இது பற்றி கிராமத்தினர் கூறுகையில், 'அரசியலமைப்பு படி மூன்றில் ஒரு
பகுதியினர் இருந்தால் தனித்தொகுதி அறிவிக்கலாம். சுழற்சிமுறை என்றாலும் இரு
முறை தான் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர்கள் 19 சதவிகிதம் மட்டுமே
இருக்கும் நிலையில் 3 வது முறையாக ஒதுக்கீடு செய்திருப்பது
அதிர்ச்சியளிக்கிறது. உரிய பதில் கிடைக்கவில்லையெனில் 81 சதவிகிதம்
மட்டுமின்றி 19 சதவிகிதம் இருக்கும் ஆதிதிராவிடர்களும் இணைந்து தேர்தலை
புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர். இது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த
போது,'ஊராட்சி வார்டு பற்றி மட்டுமே ஒன்றிய அளவில் முடிவு செய்யப்படும்.
ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் இடஒதுக்கீடு
முழுவதும் மாநிலதேர்தல் ஆணையத்தின் முடிவே. கடந்த முறையை அமல்படுத்துமாறு
மாநிலம் முழுவதிற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது,' என்றனர்.