/உள்ளூர் செய்திகள்/திருச்சி/போலீஸ் கமிஷனர் அதிரடி குண்டர் சட்டத்தில் மூவர் அதிரடி கைதுபோலீஸ் கமிஷனர் அதிரடி குண்டர் சட்டத்தில் மூவர் அதிரடி கைது
போலீஸ் கமிஷனர் அதிரடி குண்டர் சட்டத்தில் மூவர் அதிரடி கைது
போலீஸ் கமிஷனர் அதிரடி குண்டர் சட்டத்தில் மூவர் அதிரடி கைது
போலீஸ் கமிஷனர் அதிரடி குண்டர் சட்டத்தில் மூவர் அதிரடி கைது
ADDED : செப் 16, 2011 12:26 AM
திருச்சி: திருச்சியில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து வெளியிட்ட அறிக்கை: திருச்சி கொட்டப்பட்டுவைச் சேர்ந்த ஜெய் என்கிற ஜெயக்குமார் (32), கோவை ரத்திபுரியைச் சேர்ந்த முருகேசன் என்கிற கூலை முருகேசன் (28), லால்குடியைச் சேர்ந்த அழகர் என்கிற தேவா (38) ஆகிய மூவரும் மாநகர பகுதிகளில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால், அவர்கள் மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. அதன்பேரில் மூவரும் கடந்த 15ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


