/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/முன்னாள் படைவீரர் வேறு மாவட்டத்தில் சிகிச்சை பெறும் வசதி: உதவி இயக்குனர்முன்னாள் படைவீரர் வேறு மாவட்டத்தில் சிகிச்சை பெறும் வசதி: உதவி இயக்குனர்
முன்னாள் படைவீரர் வேறு மாவட்டத்தில் சிகிச்சை பெறும் வசதி: உதவி இயக்குனர்
முன்னாள் படைவீரர் வேறு மாவட்டத்தில் சிகிச்சை பெறும் வசதி: உதவி இயக்குனர்
முன்னாள் படைவீரர் வேறு மாவட்டத்தில் சிகிச்சை பெறும் வசதி: உதவி இயக்குனர்
ADDED : ஜூலை 24, 2011 12:59 AM
நாமக்கல்: 'பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ், இ.சி.ஹெச்.எஸ்., அடையாள அட்டை வைத்திருக்கும் முன்னாள் படைவீரர்கள், வேறு மாவட்டத்திலும் சிகிச்சை பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது' என, முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குனர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ், அடையாள அட்டை வைத்திருக்கும் முன்னாள் படை வீரர்கள், விதவையர்கள், தற்போது சிகிச்சை பெற்று வரும் பாலிகிளினிக் தவிர, பிற மாவட்டத்தில் உள்ள பாலிகிளினிக்கிலும் சிகிச்சை பெற வேண்டியிருப்பின் தங்களது இ.சி.ஹெச்.எஸ்., அடையாள அட்டையை மட்டுமே பயன்படுத்தி அனைத்து வகையான சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
வேறு மாவட்ட பாலிகிளினிக்கில் தற்காலிக உறுப்பினராக தொடர விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், ஏழு நாட்களுக்கு ஒருமுறை மருந்துகள் வழங்கப்படும். வேறு மாவட்டத்துக்கு நிரந்தர உறுப்பினராக விருப்பம் தெரிவிக்கவும், இத்திட்டம் மூலம் முன்னாள் படைவீரர், விதையருக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, முன்னர் கடைபிடித்து வரும் பேரண்ட் பாலிகிளினிக்கால் வேறு மாவட்ட இ.சி.ஹெச்.எஸ்., பாலி கிளினிக்கில் சிகிச்சை பெற வழங்கப்பட்டு வந்த கடிதமுறை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


