/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மண்வளப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்மண்வளப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
மண்வளப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
மண்வளப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
மண்வளப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 22, 2011 12:17 AM
திண்டிவனம் : மண் வளப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் காட்டுசிவிரி
கிராமத்தில் நடந்தது.
திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தில் நடந்த
முகாமிற்கு வேளாண்மை ஆராய்ச்சி அறிவியல் நிலைய தலைவர் சாத்தையா தலைமை
தாங்கினார். இதில் அவர் பேசியதாவது : பருவநிலை மாற்றங்களால் உற்பத்தி திறன்
பாதிப்புகளை விவசாயிகள் சமாளிப்பதற்கான பல்வேறு யுக்திகள்
வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் மயிலம்
வட்டம் காட்டுச்சிவிரி கிராமத்தில் வயல்களின் மண் வளத்தை அறிய
திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக மண் மாதிரி சேகரிக்கப்பட்டு, 300
விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த உரப்
பரிந்துரையை பின்பற்றும் விவசாய நிலங்களில் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.
இவ்வாறு சாத்தையா பேசினார். நிகழ்ச்சியில் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள்
செந்தில்வேல், பிரபு, ரமேஷ், ஊராட்சி தலைவர் ஏழுமலை, முன்னோடி விவசாயிகள்
மணிவேலன், பாண்டியன், மணி, கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.


