Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு

விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு

விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு

விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு

ADDED : ஆக 09, 2011 02:44 AM


Google News

விழுப்புரம் : விழுப்புரத்தில் கம்பன் விழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் கம்பன் கழகம் சார்பில் 28ம் ஆண்டு கம்பன் விழா கடந்த 5ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடந்தது.

நிறைவு நாள் நிழ்ச்சியில் பொது சேவையில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு கம்பன் கழகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் செல்வராஜ், ரோட்டரி மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், சங்க இலக்கிய பொதும்பர் தலைவர் தமிழரசு, விழுப்புரம் வரலாற்று சுவடுகள் ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோரில் பொதுசேவையை பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் தலைமையில் கம்ப ராமாயணத்தின் உண்மையாண வெற்றி கம்பனுக்கா, ராமனுக்கா என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. இதில் சண்முகவடிவேல், பழனியப்பன், தேவிலட்சுமி ஒரு அணியிலும். ராமலிங்கம், நீலகண்டன், விஜயசுந்தரி மற்றொரு அணியிலும் பேசினர்.கண்ணப்பர் அறக்கட்டளையின் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us