/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி ஆவினில் உபரி பால் ரூ. பல லட்சம் வருவாய்தேனி ஆவினில் உபரி பால் ரூ. பல லட்சம் வருவாய்
தேனி ஆவினில் உபரி பால் ரூ. பல லட்சம் வருவாய்
தேனி ஆவினில் உபரி பால் ரூ. பல லட்சம் வருவாய்
தேனி ஆவினில் உபரி பால் ரூ. பல லட்சம் வருவாய்
ADDED : செப் 20, 2011 10:27 PM
தேனி:தேனி ஆவினில் உபரி பால் மூலம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய்
வந்து கொண்டுள்ளது.தேனி ஆவினுக்கு 894 கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும்
ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் சப்ளையாகிறது.
சங்கங்களில் இருந்தும்,
விவசாயிகளிடம் இருந்தும் பால் எடுக்கும் போது, உபரியாக வரும் 200 மி.லி.,
500 மி.லி., பாலை கணக்கில் வைப்பதில்லை. இப்படி வரும் பால் மட்டும் தினமும்
600 முதல் 800 லிட்டரை தாண்டும். இதன் மூலம் மட்டும் தினமும் 12 ஆயிரம்
ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய்க்கு பால் உபரியாக கிடைக்கிறது.இந்த பாலை
கணக்கு காட்டாமல் அதிகாரிகள் மறைக்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்த
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் வலியுறுத்தி உளளன.


