ADDED : ஆக 24, 2011 02:46 AM
ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி நடுத்தெரு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன், ஸ்ரீ கிழக்கித்து முத்துசுவாமி கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.
இதை முன்னிட்டு பிரம்ம சக்தி அம்மன் கோயிலில் கணபதி பூஜை, கோபூஜை, லட்சுமிபூஜை, நவக்கிரக சாந்தி வருஷ பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து மகா மிருத்யுஞ்ஜய ஹோமமும், சுயவரம் பார்வதி ஹோமமும் நடந்தது. பின்னர் காந்தி தெருவில் உள்ள கிழக்கித்து முத்துசுவாமி கோயிலில் வருஷபூஜையும், சாந்தி ஹோமமும் நடந்தது.வருஷாபிஷேகத்தை வடபழனி முருகன் கோயில் சிவாச்சாரியார் சுரேஷ், சந்தோஷ், தாம்பரம் ஸ்ரீதர், பிச்சை ஆகியோர் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.