ADDED : செப் 19, 2011 10:36 PM
திண்டுக்கல் : மதுரை லூர்து நகரை சேர்ந்த சவுபாக் ஜலீலா,31,க்கும், திண்டுக்கல் ஆர்.வி.நகரைசேர்ந்த அப்துல்ஹக்கீமுக்கும், 2009 ல் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது பெண் வீட்டார் இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசையும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் மேலும் 25 பவுன் நகையும், மூன்று லட்சம் ரூபாய் பணமும் கேட்டு, ஹக்கீம், மனைவி சவுபாக்ஜலீலா வை கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு தூண்டுதலாக கணவனின் உறவினர்கள் மைதீன்பாட்சா, அசீனாபேகம் உட்பட நான்கு பேர் இருந்துள்ளனர். சவுபாக் ஜலீலா கொடுத்த புகாரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் ஹக்கீமை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.