/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மகளிர் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை புகார் கொடுப்பவர்கள் அலைக்கழிப்புமகளிர் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை புகார் கொடுப்பவர்கள் அலைக்கழிப்பு
மகளிர் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை புகார் கொடுப்பவர்கள் அலைக்கழிப்பு
மகளிர் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை புகார் கொடுப்பவர்கள் அலைக்கழிப்பு
மகளிர் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை புகார் கொடுப்பவர்கள் அலைக்கழிப்பு
ADDED : செப் 23, 2011 01:05 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறையால் வேலை பளுவில் போலீசார் திணறுகின்றனர்.
அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பந்தல்குடி ரோட்டில் உள்ளது. அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி பகுதியை சேர்ந்த வழக்குகள் இங்கு விசாரிக்கப்படுகிறது. இந்த ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், மூன்று எஸ்.ஐ., ஆறு ஏட்டுகள், கிரேடு 1 போலீசார் ஒன்பது மற்றும் போலீசார் 14 பேர்கள் இருக்க வேண்டும். அதிகாரிகளை தவிர, நான்கு போலீசார் மட்டுமே இருக்கின்றனர். இவர்கள் தான் பாரா, கோர்ட், புகார் மனு விசாரணை, சம்மன் கொடுக்க, மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. தினசரி பணிகளை செய்வதற்கு இருக்கின்ற போலீசார் திணறுகின்றனர். இதில் வேறு பணிக்கு சென்றால் புகார்கள் மீதான விசாரணை போன்ற பணிகள் பாதிப்பு அடைகின்றன. விசராணைக்கு வருகின்றவர்கள் பலமணிநேரம் காத்திருக்கின்ற சூழ்நிலையில் உள்ளனர். நீண்ட தூரம் உள்ள கிராமங்களில் இருக்கின்றவர்கள் புகார் கொடுக்க வரும்பொழுது அலைகழிக்கப்படுகின்றனர். போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசாரை நியமிக்க வேண்டும்.