/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாஜி எம்.எல்.ஏ., கணவர் வேட்பாளர் ஆனார்மாஜி எம்.எல்.ஏ., கணவர் வேட்பாளர் ஆனார்
மாஜி எம்.எல்.ஏ., கணவர் வேட்பாளர் ஆனார்
மாஜி எம்.எல்.ஏ., கணவர் வேட்பாளர் ஆனார்
மாஜி எம்.எல்.ஏ., கணவர் வேட்பாளர் ஆனார்
ADDED : செப் 23, 2011 12:56 AM
நிலக்கோட்டை : நிலக்கோட்டை அ.தி.
மு.க., முன்னாள் எம்.எல். ஏ., வின் கணவர் சேகர், பேரூராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நிலக்கோட்டை தொகுதியில் கடந்த முறை எம்.எல்.ஏ., வாக இருந்தவர் தேன்மொழி. கடந்த தேர்தலில் இத்தொகுதி, புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளா ட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிட தேன்மொழி விருப்ப மனு கொடுத்தார். இவரது கணவர் சேகரை வேட்பாளராக, கட்சி தலைமை அறிவித்தது. இப்பதவிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட பலர் விருப்ப மனு கொடுத்திருந்தனர்.