Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம்ஆக்கிரமிப்பு பகுதி சிலைகளை அகற்ற அவகாசம்

விழுப்புரத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம்ஆக்கிரமிப்பு பகுதி சிலைகளை அகற்ற அவகாசம்

விழுப்புரத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம்ஆக்கிரமிப்பு பகுதி சிலைகளை அகற்ற அவகாசம்

விழுப்புரத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம்ஆக்கிரமிப்பு பகுதி சிலைகளை அகற்ற அவகாசம்

ADDED : ஆக 19, 2011 03:59 AM


Google News
விழுப்புரம்:விழுப்புரத்தில் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்கு ஆக்கிரமிப்பில் உள்ள சிலைகளை அகற்றி அமைக்க ஆலோசனைக் கூட்டத்தில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விழுப்புரத்தில் சாலை அகலப்படுத்தும் திட்டத்திற்காக ஆக்கிரமிப்பில் உள்ள சிலைகளை அகற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ., பிரியா தலைமையில் நடந்தது. தாசில்தார் ஜவகர், துணை தாசில்தார் ராஜு, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் தன்ராஜ், வருவாய் ஆய்வாளர் ஆதிசக்தி முன்னிலை வகித்தனர். காங்.,- ஜனதா, அ.தி.மு.க.,- ம.தி.மு.க., மற்றும் வி.சி., உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஆர்.டி.ஓ., பிரியா பேசும்போது, விழுப்புரத்தில் போக் குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் விதத்தில் இருவழிச் சாலையாக உள்ள திருச்சி-சென்னை நெடுஞ்சாலையை பல்வழி சாலையாக அகலப்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக 4.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 23 மீட்டர் அளவில் சாலை அகலப்படுத்தப்படுகிறது. சென்டர் மீடியனோடு அமையும் சிறப்பான இத்திட்டத்திற்கு பின் மூன்று பஸ்கள் சென்று வரும் அளவில் சாலை அகலமாக அமையும்.

இத்திட்டத்தில் மேல்தெரு விநாயகர் கோவில் துவங்கி தனியார் மகளிர் கல்லூரி வரை அகலப்படுத்தப்படுகிறது. நெடுஞ்சாலை எல்லைகள் அளவிடப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு, மரங்கள், மின் கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனுமதியின்றி சாலையில் 10 இடங்களில் அமைந்துள்ள தலைவர்களின் சிலைகள், கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது. இது குறித்து ஏற்கனவே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நன்மை கருதி சிலை, கோவில் நிறுவியவர்கள் அதனை தாங்களாகவே அப்புறப்படுத்தி நகரின் வளர்ச்சித் திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசும்போது, தலைவர்கள் சிலைகளை அகற்ற கூடாது, மாற்று இடம் கொடுக்க வேண்டும். நகரில் சிக்னல் இயங்கவில்லை, கடைகள், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை முதலில் அகற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.அதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ., பிரியா, பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அளந்து அகற்றப்பட்டு வருகிறது. மின் கம்பங்கள் அகற்றப்பட்ட பின் ஒரு வார காலத்தில் சிலைகளையும் அகற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us