Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ரத்தமாதிரி தர மறுத்தால்? திவாரிக்கு கோர்ட் எச்சரிக்கை

ரத்தமாதிரி தர மறுத்தால்? திவாரிக்கு கோர்ட் எச்சரிக்கை

ரத்தமாதிரி தர மறுத்தால்? திவாரிக்கு கோர்ட் எச்சரிக்கை

ரத்தமாதிரி தர மறுத்தால்? திவாரிக்கு கோர்ட் எச்சரிக்கை

ADDED : ஜூலை 29, 2011 04:11 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: தந்தை உரிமை கோரி , மூத்த காங்கிரஸ் கட்சித்தலைவர் என்.டி.திவாரிக்கு கோர்ட் உத்தரவிட்டும் ரத்த மாதிரி தர மறுத்தால், வழக்கு தொடர்ந்தவரே திவாரியின் மகன் என அதிகாரப்பூர்வமாக உத்தரவிட நேரிடும் என டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழக்கினை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர், ஆந்திர மாநில முன்னாள் கவர்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் என அழைக்கப்படும் என்.டி.திவாரி (87) மீது , ரோஹித் ஷேகர் (32) என்பவர், தந்‌தை உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார். உஜ்வாலா ஷர்மா என்ற வேலைக்காரப் பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பினால் தான் பிறந்ததாகவும் கூறினார்.இதற்கு திவாரி மறுப்பு தெரிவித்தார். எனினும் தகுந்த புகைப்படங்களுடன் ஆதாரம் வெளியிட்டதால். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் டில்லி ஐகோர்ட் திவாரியின் ரத்தமாதிரியினை எடுத்து மரபணு சோதனை நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ரத்தமாதிரியை வழங்க மறுத்து தன்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என கூறி வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று டில்லி ஐகோர்டில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கீதாமிட்டல் விசாரணை நடத்தினார். திவாரி சார்பில் பஹர்-இ-பர்கூ ஆஜரானார். விசாரணையில், ஒரு மூத்த குடிமகனாக உள்ள திவாரி, கோர்ட் உத்தரவை அவமதிப்பது ஏன்?, ரத்தமாதிரிக்கு பதிலாக, தோல், நகம், தலைமுடி உள்ளிட்ட ஏதாவது ஒன்றினை மரபணு சோதனைக்கு கொடுக்க விருப்பமா?,இனிமேலும் இந்த வழக்கினை இழுத்தடிப்பதை ஏற்று்க்கொள்ள முடியாது. தொடர்ந்து மறுத்து வந்தால், வழக்கு தொடர்ந்த ‌ரோஹித் ஷேகர், திவாரியின் மகன்தான் என உத்தரவிட நேரிடும் . இவ்வாறு நீதிபதி கீதா மிட்டல் கூறினார். வழக்கினை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us