Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வீட்டை அடித்து சேதப்படுத்திய 9 பேருக்கு போலீஸ் வலை

வீட்டை அடித்து சேதப்படுத்திய 9 பேருக்கு போலீஸ் வலை

வீட்டை அடித்து சேதப்படுத்திய 9 பேருக்கு போலீஸ் வலை

வீட்டை அடித்து சேதப்படுத்திய 9 பேருக்கு போலீஸ் வலை

ADDED : அக் 14, 2011 01:47 AM


Google News
பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே தேர்தலில் ஓட்டு சேகரிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட மோதலில் வீட்டை அடித்து சேதப்படுத்திய 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 32. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தேசிங்குராஜனுக்கும் தேர்தலில் ஓட்டு சேகரிப்பது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு இரண்டு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இதில் தேசிங்குராஜன் உறவினர் வீடு அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து நீலா கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து ராமகிருஷ்ணன், பரமசிவம், மணி, வாசுதேவன், பாலகிருஷ்ணன், பாலாஜி, ஏழமுத்து, அழகுவேல், மணிகண்டன் ஆகிய 9 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us