ADDED : செப் 28, 2011 11:34 PM
தர்மபுரி : தர்மபுரி அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தர்மபுரி அடுத்த பாப்பாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தசாமி. இவரது மனைவி சின்னபாப்பா (27). இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சின்னபாப்பா விஷம் குடித்தார். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சின்னபாப்பா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.


