/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சிஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
ADDED : ஆக 30, 2011 12:20 AM
கோவை : கல்வியை தொடர இயலாத ஏழை, எளிய கிராமப்புற இளைஞர்களுக்கு, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.கல்லூரி முதல்வர் பத்மினி வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆதரவுடன், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
கல்வியை தொடர இயலாத ஏழை, எளிய கிராமப்புற இளைஞர்கள் மற்றும் வறுமை கோட்டிக்கு கீழ் இருப்போரின் மேம்பாட்டுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது.அவிநாசி ரோடு, கொடிசியா வளாகம் அருகில், இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அழகுகலை பயிற்சி (மூன்று மாதம்), மெது பொம்மைகள் செய்தல்(ஒரு மாதம்), தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சி (ஆறு மாதம்) போன்ற பெண்களுக்கான பயிற்சிகளும், மொபைல்போன் சர்வீஸ் (ஒரு மாதம்), வீட்டு ஒயரிங் (மூன்று மாதம்), வீட்டு உபயோக மின்சார உபகரணங்கள், பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி (மூன்று மாதம்), சி.என்.சி.,புரோகிராமிங் (ஒரு மாதம்) போன்ற ஆண்களுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகினறன.கணிப்பொறி பயிற்சி(மூன்று மாதம்), காகிதப்பை செய்தல் (இரண்டு வாரம்), பேக்கரி பொருள்கள் தயாரித்தல் (ஒரு மாதம்), உணவு பாதுகாத்தல் மற்றும் பதப்படுத்தல் (ஒரு மாதம்), பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்துதல் (இரண்டு வாரம்), கயிறு கால்மிதியடி தயாரித்தல் (இரண்டு மாதம்), சணல்பைகள் தயாரித்தல் (ஒரு மாதம்) போன்ற இருபாலருக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.அரசூர், இருகூர், காளப்பட்டி, பட்டணம், கலங்கல் ஆகிய விரிவாக்க மையங்களில் பெண்களுக்கு ஆறுமாத பயிற்சியாக தையல் மற்றும் எம்ப்ராய்டரி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன; சான்றிதழ்கள் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பயிற்சிகளில் சேர விரும்புவோர் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் அல்லது திட்ட அலுவலர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அவிநாசி சாலை, சிவில் ஏரோட்ரோம் அஞ்சல், கோவை-641014 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு 0422-2913220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


