/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பயனாளிகளுக்கு வழங்க மாடுகள் வாங்கி பராமரிப்புபயனாளிகளுக்கு வழங்க மாடுகள் வாங்கி பராமரிப்பு
பயனாளிகளுக்கு வழங்க மாடுகள் வாங்கி பராமரிப்பு
பயனாளிகளுக்கு வழங்க மாடுகள் வாங்கி பராமரிப்பு
பயனாளிகளுக்கு வழங்க மாடுகள் வாங்கி பராமரிப்பு
ADDED : செப் 11, 2011 10:58 PM
கொடைக்கானல் : கொடைக்கானல் தாலுகாவில் அரசின் இலவச திட்டமான ஆடு, மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கும் தலா ஒரு மாடுவீதம் வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அரசின் இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தின் கீழ் தாலுகாவிற்குட்பட்ட குறைந்த மக்கள் தொகை அடிப்படையில் கும்பரையூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதில், 50 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வான பயானளிகளுக்கு மாடுகள் வாங்க உத்தரவிட்டன. இதற்காக பயனாளிகள், கால்நடை மருத்துவர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஐகோட்டாவிலிருந்து சிந்து மாடுகள் தலா 30 000 ரூபாய் மதிப்பில் வாங்கி வரப்பட்டுள்ளன. கும்பரையூர் ஊராட்சி மன்றத்தலைவர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது: அரசு உத்தரவுப்படி பயனாளிகளுக்கு வழங்க மாடுகள் வாங்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு காப்பீடும் செய்யப்பட்டுள்ளது. இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவங்க உள்ளதையடுத்து, செப்.15 ல் பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்படும், என்றார்.