ADDED : செப் 26, 2011 10:59 PM
கொடைக்கானல்:கடந்த 30 ஆண்டுகளாக ரோடு அமைக்காததால், மக்கள் மறியல் செய்தனர்.கொடைக்கானல் நகராட்சி 14 வார்டுக்கு உட்பட்டது தந்திமேடு.
இப்பகுதிக்கு ரோடு இல்லாததால், மண்பாதையில் 5 கி.மீ., க்கு மேல் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. அதிகாரிகள், ஓட்டுக்கேட்க வரும் அரசியல்வாதிகளிடம் முறையிட்டும் பயனில்லை. நேற்று, மறியலில் ஈடுபட்டனர். பிரசாரத்திற்கு வந்த அ.தி.மு.க., வேட்பாளர் கோவிந்தனை, முற்றுகையிட்டனர். அவர் அளித்த வாக்குறுதிப்படி, கலை ந்து சென்றனர்.