பரமக்குடியில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
பரமக்குடியில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
பரமக்குடியில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
மதுரை: ''பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, சட்டப்படி நிவாரணம் வழங்க, அரசு தயாராகவுள்ளது'' என, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த விசாரணையில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
ஐகோர்ட் கிளை வழக்கறிஞர் முருகன் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ''பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணம் வழங்க வேண்டும்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்,''பலியானவர் குடும்பங்களுக்கு, அரசு ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளது. சட்டப்படி, அவர்களுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க, அரசு தயாராகவுள்ளது'' என்றார். அதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்குகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய, அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர். வழக்கறிஞர் ரத்தினம், ''துப்பாக்கிச் சூட்டில் காயமுற்று, மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உதவியாக உள்ளவர்களுக்கும், உணவு போன்ற வசதிகளைச் செய்ய வேண்டும்'' என்றார். இதுகுறித்து, கலெக்டரிடம் பேசி முடிந்த அளவு உதவும்படி, கூடுதல் அட்வகேட் ஜெரனலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.