Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: போலீசாருக்கு ஐ.ஜி., அறிவுரை

பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: போலீசாருக்கு ஐ.ஜி., அறிவுரை

பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: போலீசாருக்கு ஐ.ஜி., அறிவுரை

பொதுமக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: போலீசாருக்கு ஐ.ஜி., அறிவுரை

ADDED : ஆக 03, 2011 01:31 AM


Google News
பொள்ளாச்சி : 'போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியை பலப்படுத்தி குற்றங்களை தடுப்பதுடன், பொதுமக்களுடன் நல்லுறவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்' என, ஐ.ஜி., வன்னியபெருமாள் போலீசாரை அறிவுறுத்தினார்.

பொள்ளாச்சி போலீஸ் டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று போலீஸ் மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் ஆய்வு செய்தார். பொள்ளாச்சி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் பதிவான வழக்கு விபரங்களை பார்வையிட்டார். பொள்ளாச்சி சப்-டிவிஷனில் கொலை, கொள்ளை வழக்குகளில் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். வாகன விபத்து, வாகன திருட்டுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் கொள்ளை சம்பவம் நடக்காமல் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளை அறிவுறுத்தினார். டி.எஸ்.பி., அலுவலகத்திலுள்ள சப்-டிவிஷன் வரைபடம் பழுதடைந்து, போதுமான விபரங்கள் இல்லாமல் இருந்தது. சப்-டிவிஷன் வரைபடத்தை புதுப்பித்து, கோவில்கள், மசூதி, சர்ச், பள்ளிக்கூடம், கல்லூரிகள், அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன்களை குறியீடு செய்து புதிய வரைபடம் வைக்க உத்தரவிட்டார். போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து தினமும் வழக்குப்பதிவு நிலவரங்களை பெற்று, டி.எஸ்.பி., அலுவலகத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணிகளை பலப்படுத்தி குற்றங்களை தடுக்க வேண்டும். பொதுமக்களுடன் நல்லுறவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்ட ஐ.ஜி., வழக்கு விபரங்களை கேட்டறிந்தார். அதன்பின், வாகன விபத்து, கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆய்வின் போது, பொள் ளாச்சி டி.எஸ்.பி., பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், மகேந்திரன், ஜெயராமன், சுப்பிரமணியம், சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர். மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள் நிருபர்களிடம் கூறுகையில், 'பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில் வழக்கமான ஆய்வு பணிக்காக வந்துள்ளேன். பொது இடங்களிலும், பொதுமக்களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். இதுவரை வழக்கு விசாரணைகள் நிலுவையில் இருந்தது. புதிதாக டி.எஸ்.பி., பொறுப்பேற்ற பிறகு விசாரணைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. முடங்கி கிடந்த போலீசார் வேகமாக பணியாற்றுகின்றனர். நிலுவை வழக்குகள் அனைத்தும் விசாரணைக்கு வந்துள்ளது. சூலூர் போலீஸ் எல்லையில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் சிக்கியுள்ளனர். சூலூர் பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன சிறுவன் மும்பையில் மீட்கப்பட்டுள்ளான். இதேபோன்று ஒவ்வொரு வழக்குக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us