விழுப்புரம் : விழுப்புரம் பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், அருளாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கோவில் திருசுற்று உலா நடந்தது. பசுபதீஸ்வரர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அர்ச்சகர் வெங்கட சுப்பரமணியம் குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தார்.