ADDED : செப் 18, 2011 09:45 PM
சிறுமுகை : மூலத்துறை கிராமத்தில் அருந்தமிழர் இளைஞர் நற்பணி சங்கமும்,
நேரு யுவகேந்திராவும் இணைந்து, மத நல்லிணக்க இருவார விழாவை நடத்தின.
விழாவில், மக்கள் மதநல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பள்ளி மாணவ,
மாணவியருக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடந்தன. வெற்றி
பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவுக்கு இளைஞர் நற்பணி சங்கத்தலைவர்
கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நடராஜ், துணைச்செயலாளர் சிவராஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்
ராமசாமி, பேரூராட்சி தலைவர் உதயகுமார், நேரு யுவகேந்திரா கணக்காளர்
தமிழரசன், தலைமை ஆசிரியர்கள் சரஸ்வதி, ஜெயா ஆகியோர் பரிசுகளை வழங்கி
பேசினர். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் ரங்கராஜ், சுபவேல், ஷாநவாஸ்,
ஆசிரியர்கள் ஆறுமுகம், திருமுருகன், கவுன்சிலர் ஆறுமுகம் உள்பட பலர்
பங்கேற்றனர். ரவிக்குமார் வரவேற்றார்; சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்
கோபால் நன்றி கூறினார்.