பஸ்கள் நிறுத்தம் கிராமமக்கள் பாதிப்பு
பஸ்கள் நிறுத்தம் கிராமமக்கள் பாதிப்பு
பஸ்கள் நிறுத்தம் கிராமமக்கள் பாதிப்பு
ADDED : செப் 15, 2011 10:04 PM
தேவதானப்பட்டி : பரமக்குடியில் நடந்த துப்பாக்கிசூட்டை தொடர்ந்து காட்ரோடு, ஜெயமங்கலம், சிந்துவம்பட்டி உட்பட மாவட்டத்தில் சில பகுதிகளில் பஸ்கள் மீது மர்மக்கும்பல் கல்வீசி தாக்கியது.
பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, ஜெயமங்கலம், வைகை அணை வழியாக ஆண்டிபட்டிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் போக்குவரத்துக்கு வழியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கி பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.