ADDED : செப் 01, 2011 11:48 PM
கடலூர் : விதை உற்பத்தி செய்யும் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி கடலூரில் நடந்தது.
பயிற்சிக்கு விதை சான்று உதவி இயக்குனர் ஹரிதாஸ் தலைமை தாங்கினார்.
பயிற்சியில் விதை பண்ணை பதிவு, சுத்திகரிப்பு பணிகள், சான்றுப்பணிகள் சிறப்பு அனுமதி மற்றும் தள்ளுபடி பரிந்துரை விதை பகுப்பாய்வு விதை ஆய்வு நடைமுறைகள் தொடர்பாக விதை சான்று அலுவலர்கள் ரவிச்சந்திரன், அமிர்தராஜ், பிரேம்சாந்தி ரமேஷ், நடன சபாபதி ஆகியோர் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.