/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் மாற்றம்எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் மாற்றம்
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் மாற்றம்
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் மாற்றம்
எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைமை கரும்பு அலுவலர் மாற்றம்
ADDED : ஆக 23, 2011 11:40 PM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை
தலைமை கரும்பு அலுவலர் மாற்றப்பட்டார்.
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.,
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தலைமை கரும்பு அலுவலராக சந்திரசேகரன்
பணிபுரிந்து வந்தார். இவரது தலைமையிலான கரும்புத் துறையில் பல்வேறு
முறைகேடுகள் நடப்பதாக விவசாயிகளும், தொழிற் சங்கத்தினரும் புகார் கூறி
வந்தனர். இந்நிலையில் சர்க்கரை துறை ஆணையம், சந்திரசேகரனை தஞ்சாவூர்
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் தலைமை கரும்பு அலுவலராக மாற்றம்
செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மூத்த கரும்பு அலுவலர் முருகேசன்
தலைமை கரும்பு (பொறுப்பு) அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.