/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலையில் லஞ்ச வழக்கில் மின்வாரிய அதிகாரி திடீர் கைதுகுளித்தலையில் லஞ்ச வழக்கில் மின்வாரிய அதிகாரி திடீர் கைது
குளித்தலையில் லஞ்ச வழக்கில் மின்வாரிய அதிகாரி திடீர் கைது
குளித்தலையில் லஞ்ச வழக்கில் மின்வாரிய அதிகாரி திடீர் கைது
குளித்தலையில் லஞ்ச வழக்கில் மின்வாரிய அதிகாரி திடீர் கைது
ADDED : ஆக 11, 2011 02:43 AM
குளித்தலை: குளித்தலை அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை நெய்தலூர் காலனியைச் சேர்ந்த இருளான் என்பவரது மகன் சுந்தர்ராஜ் (50). அதே பகுதியில் 'காசி' என்ற பெயரில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவர் ரைஸ் மில்லுக்கு தனி மின்கம்பம் மற்றும் மின் இணைப்புக்காக சின்னப்பனையூர் துணை மின் நிலைய அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்திருந்தார். அதை ஆய்வு செய்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணன், '25 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும்' எனக் கேட்டுள்ளார். இதையடுத்து சுந்தர்ராஜ், முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாயை நாராயணனிடம் முன் பணமாக கொடுத்துள்ளார். மேலும், பணம் கொடுக்க விரும்பாத சுந்தர்ராஜ், திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதியிடம் இதுதொடர்பாக புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் யோசனைப்படி, நேற்று காலை 11.00 மணியளவில் சின்னப்பனையூர் துணை மின் நிலையத்தில் இருந்த நாராயணிடம், ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாயை சுந்தர்ராஜ் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதி உள்ளிட்ட போலீஸார், நாராயணனை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் திருச்சி அடுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள நாராயணனின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.