/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ராஜாதேசிங்கு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்ராஜாதேசிங்கு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
ராஜாதேசிங்கு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
ராஜாதேசிங்கு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
ராஜாதேசிங்கு கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஆக 02, 2011 01:01 AM
செஞ்சி : ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர்.செஞ்சி தாலுகா நாட்டார்மங்கலம்-களையூர் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
இதில், இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். சென்னையை சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேர்முக தேர்வு நடத்தி, 800 பேரை வேலைக்குத் தேர்வு செய்தனர்.இவர்களுக்கு பணி நியமன சான்றிதழை ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரி சேர்மன் செஞ்சி பாபு, செயலாளர் வழக்கறிஞர் ராமச்சந்திரன், பொருளாளர் தண்டபாணி வழங்கினர்.கல்லூரி இயக்குநர் அண்ணாமலை, கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராஜேந்திரன், கேர்புரோ எச்.ஆர். சொலுஷன் நிறுவனத்தின் நிர்வாகிகள் சுரேஷ், சரவணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.