வைகுண்டராஜனுக்கு எதிராக மனு தாக்கல்
வைகுண்டராஜனுக்கு எதிராக மனு தாக்கல்
வைகுண்டராஜனுக்கு எதிராக மனு தாக்கல்
ADDED : ஆக 05, 2011 09:45 PM
மதுரை: நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே நிலத்தை ஆக்கிரமித்ததாக வி.வி.மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜனுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. நெல்லை திசையன்விளையை சேர்ந்த சரவணக்குமார் தாக்கல் செய்த மனு: ராதாபுரம் தாலுகாவில் கரைசுத்துபுதூரில், பெருமாள் வகையறாக்களுக்கு சொந்தமான, 116 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஏழு ஏக்கர் நிலத்தை நான் வாங்கியுள்ளேன். அதே சர்வே நம்பரில், 17 ஏக்கர் நிலத்தை வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர்கள் வாங்கியுள்ளனர். வேறு சிலரும் நிலங்களை வாங்கியுள்ளனர்.
ஆனால், வைகுண்டராஜன் மற்றும் அவரது தரப்பினர், 116 ஏக்கர் நிலத்தையும் சுற்றி வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதனால், என் நிலத்திற்கு செல்ல முடியவில்லை. அவரை வெளியேற்றக் கோரி, கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.