Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருக்குர் ஆன் வெளியீட்டு விழா

திருக்குர் ஆன் வெளியீட்டு விழா

திருக்குர் ஆன் வெளியீட்டு விழா

திருக்குர் ஆன் வெளியீட்டு விழா

ADDED : செப் 27, 2011 06:25 PM


Google News
Latest Tamil News

கோவை: திருக்குர் ஆன் அறக்கட்டளை சார்பில், திருக்குர் ஆன் தமிழாக்கத்தின் எட்டாவது பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது.

குறிச்சி பிரிவு அருகேயுள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவுக்கு, சுல்தான் தலைமை வகித்தார். வக்கீல் ஹனீபா வரவேற்றார். பல்சமய ஆய்வா ளர் குப்புசாமி பேசுகையில், ''அனைத்து சமயங்களும் அன்பை போதிக்கின்றன. இஸ்லாமியர் தங்களது முக்கிய கடமையான ஐந்து முறை தொழுதலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பிறருக்கு உதவும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

குனியமுத்தூர், தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமா அத்தின் தலைமை இமாம் அப்துர் ரஹ்மான் ஆலிம் உலூமி, கவிஞர் புவியரசு ஆகியோர் பேசினர். சென்னை, ஐ.எப்.டி.,யின் உதவித் தலைவர் டாக்டர் ஹபீப் முஹமதுவுக்கு, 'அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி நினைவு விருது - 2010' வழங்கப்பட்டது. திருக்குர் ஆன் தமிழாக்கத்தின் எட்டாவது பதிப்பை சுல்தான் வெளியிட, விஜய வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் எழிலவன், வக்கீல் துரைராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஜான்பாஷா நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us