/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் வீணாகும் ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள்ஈரோட்டில் வீணாகும் ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள்
ஈரோட்டில் வீணாகும் ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள்
ஈரோட்டில் வீணாகும் ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள்
ஈரோட்டில் வீணாகும் ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள்
ADDED : ஆக 05, 2011 01:59 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் விபத்துக்களை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள், பெயர்ந்து வீணாகின்றன.
ஈரோடு நகரில் வடக்கு, தெற்கு போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 40க்கும் மேற்பட்ட சிக்னல்கள் உள்ளன. ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கலெக்டர் நிதியில் இருந்து 300 ரப்பர் ஸ்பீடு பிரேக் உபகரணங்கள் வாங்க போக்குவரத்து போலீஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பிரப் சாலையில் கலைமகள் பள்ளி, செங்குந்தர் பள்ளி, நாச்சியப்பா வீதி ஆகிய மூன்று இடத்திலும், ஈ.வி.என்., சாலையில் பழனியப்பா வீதி, பெரியார் நகர் மேற்புற ஆர்ச் எதிர் புற சாலை, காந்திஜி சாலையில் பழைய பூந்துறை சாலை (பழமுதிர் நிலையம் அருகில்) பொருத்தப்படுகிறது. பெருந்துறை சாலையில் கொங்கு ஹோட்டல் அருகில் உள்ள சாலை, சொசைட்டி ஹார்ட் மருத்துவமனைஅருகே உள்ள சாலை, காவேரி ரோட்டில் காவேரி ரோடு வாய்க்கால் அருகே, பவானி சாலையில் வி.ஓ.சி., பார்க் பின்புறம் உள்ள சாலை, சக்தி சாலையில் வீரப்பன் சத்திரம் கோவில் அருகே உள்ள சாலை உள்ளிட்ட 12 இடங்களில், ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள் பொறுத்தும் பணி நடந்தது. ஆனால், 2006ல் அமைக்கப்பட்ட ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள் பயனற்று வீணானது போலவே, புதிய ஸ்பீடு பிரேக்கர்களும் வீணாகும். ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள் தேவையற்றது என, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது. ஈரோட்டில் சில தினங்களுக்கு முன் அமைக்கப்பட்டதில், பல ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்கள் பெயர்ந்தும், கம்பிகள் வெளியே நீட்டியும் வீணாகிறது. மேலும் பெயர்ந்து கிடக்கும் கம்பிகள், வாகனங்களின் டயரை பதம் பார்ப்பதால், வாகனவோட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகனங்களை பதம் பார்க்கும் ரப்பர் ஸ்பீடு பிரேக்கர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.