Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் ரோடு பணியில் முறைகேடு : கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் ரோடு பணியில் முறைகேடு : கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் ரோடு பணியில் முறைகேடு : கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் ரோடு பணியில் முறைகேடு : கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ADDED : செப் 11, 2011 11:15 PM


Google News

கீழக்கரை : கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் பணியில் முறைகேடு நடந்ததாக நகராட்சி கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் பசீர் அகமது தலைமையில், தலைமை எழுத்தர் சந்திர சேகரன் முன்னிலையில் நடந்தது.

கூட்ட விவாதம்: மணிகண்டன்: கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் ரூ.1.05 கோடியில் மேற்கொள்ளப்பட்ட தரை தளம் அமைக்கும் பணி தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் மராமத்து பணி மேற்கொள்ளவில்லை. ஹமீதுகான்: பஸ் ஸ்டாண்ட் பணியில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் மோசடி நடந்துள்ளது.

தலைவர்: ஆதாரம் சமர்ப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

துரை: ரோடுகள் சேதப்படுத்தி குடிநீர் குழாய்கள் பதிக்கப்படுகிறது. மீண்டும் ரோடு சீரமைக்க வேண்டும்.

தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். இதை தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட் பணி குறித்து கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டியதால் பரபரப்பு நிலவியது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us