/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காட்சிப்பொருளாக மகளிர் சுகாதார வளாகம்காட்சிப்பொருளாக மகளிர் சுகாதார வளாகம்
காட்சிப்பொருளாக மகளிர் சுகாதார வளாகம்
காட்சிப்பொருளாக மகளிர் சுகாதார வளாகம்
காட்சிப்பொருளாக மகளிர் சுகாதார வளாகம்
ADDED : ஆக 14, 2011 10:32 PM
மடத்துக்குளம் : மடத்துக்குளம் பேரூராட்சியில் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக இருப்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மடத்துக்குளம் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பல வீடுகளில் கழிப்பிடவசதி இல்லாமல் உள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கை அடிப்படையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் செங்குளம், பெரியவட்டாரம் பகுதிகளில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. திறந்த வெளிக்கழிப்பிட பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது என மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படவில்லை. வளாகங்களை திறக்க பொதுமக்கள் பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த பகுதி மக்கள் திறந்த வெளிக்கழிப்பிடங்களை பயன்படுத்தி வருகின்றனர்.