ADDED : ஆக 15, 2011 01:49 AM
மதுரை : மதுரை போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே ரோந்து சென்றனர்.
கேட்பாரற்று கிடந்த இரண்டு மூடைகளை சோதனையிட்டனர். அவற்றில் இருந்த 50 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். மதிப்பு 5 லட்சம் ரூபாய். தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


