/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூரில் இரு இடங்களில் இயங்கும் : சுரேஷ் ஃபிசியோதெரபி கிளினிக்மேட்டூரில் இரு இடங்களில் இயங்கும் : சுரேஷ் ஃபிசியோதெரபி கிளினிக்
மேட்டூரில் இரு இடங்களில் இயங்கும் : சுரேஷ் ஃபிசியோதெரபி கிளினிக்
மேட்டூரில் இரு இடங்களில் இயங்கும் : சுரேஷ் ஃபிசியோதெரபி கிளினிக்
மேட்டூரில் இரு இடங்களில் இயங்கும் : சுரேஷ் ஃபிசியோதெரபி கிளினிக்
மேட்டூர்: நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் இன்றி சிகிச்சை அளிக்கும் சுரேஷ் ஃபிசியோதெரபி கிளினிக், மேட்டூர் ஆர்.எஸ்., கெம்பிளாஸ்ட் 1வது பிளான்ட் எதிரில், மேட்டூர், புதுச்சாம்பள்ளி, சக்தி தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகில் என, இரு இடங்களில் செயல்படுகிறது.
சர்க்கரையால் பாதிக்கப்பட்டோருக்கு, தோள்பட்டை வலி, மூட்டு வலி ஏற்படும். இதுபோன்ற வலியை, ஃபிசியோதெரபி சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்துகிறோம். மூட்டு வலி, தோள்பட்டை பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆலோசனை மற்றும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. வயதானவர்களுக்கு பக்க விளைவுகள் இன்றி, யோகா செய்ய பயிற்சி அளிக்கிறோம். எலும்பு, நரம்பு, மூளை, தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்புகளையும், சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம். விபத்தில், முதுகு தண்டு உடைந்து விட்டால், அதற்கு கீழே உள்ள உடல் பகுதி செயலிழந்து விடும். செயல் இழந்த பகுதியை ஃபிசியோதெரபி சிகிச்சை மூலம், 75 சதவீதம் செயல்பட செய்கிறோம்.
மது அருந்துபவர்கள், இரவில் சுயநினைவை இழந்து, கையை ஒருபக்கமாக வைத்து தூங்குவார்கள். அப்போது, கை நரம்புகள் நசுங்கி, அதற்கு கீழுள்ள பகுதி செயல் இழந்து விடும். போதை தெளிந்த பின்னரே, சம்பந்தபட்டவர்களுக்கு பாதிப்பு தெரியவரும். இந்த பாதிப்பை, ஃபிசியோதெரபி சிகிச்சை மூலம், ஒரு வாரத்தில் குணப்படுத்துகிறோம். எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, அந்த பகுதி முழுவதும் வலி இருக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர்களுக்கும், உடல் பாகங்களை முழுமையாக இயக்க சிகிச்சை அளிக்கிறோம். தலையில் அடிபட்டு மூளை செயல் இழக்கும் பட்சத்தில், உடல் செயலிழந்து விடும். அவர்களுக்கும், மாற்று திறனாளிகளுக்கும் ஃபிசியோதெரபி முறையில் பயிற்சி, சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறோம்.
இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் எழுந்து உட்கார, நடக்க சில நாட்கள் ஆகும். அவர்களுக்கும், நாங்கள் சிகிச்சை அளித்து விரைவில் நடப்பதற்கு பயிற்சி அளிக்கிறோம். போதை பழக்கம், அதிக உடல் உழைப்பு, தூக்கமின்மை, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவையால் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்படுவதற்கு முன் தொடர்ந்து தலைவலி, பேசும்போது வாய் குழறல், நாக்கில் சுவை குறைவது போன்ற அறிகுறிகள் இருக்கும். நோய் தாக்கியவுடன் நரம்பியல் நிபுணர்களிடம் சிகிச்சை முடித்து, எங்களிடம் சிகிச்சைக்கு எடுத்தால் மூன்று மாதத்தில், 100 சதவீதம் குணமாக்கி விடுவோம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பலர், எங்களிடம் சிகிச்சை பெற்று குணமாகி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை, 10 முதல் மதியம், 1 மணி வரை ஃபிசியோதெரபி சிகிச்சை தொடர்பான இலவச ஆலோசனையும் வழங்கப்படுகிறது. எங்கள் கிளினிக்கில் ஃபிசியோதெரபிஸ்டுகள் கலைவாணி, சங்கீத்குமார், சந்திரசேகரன் ஆகியோர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். மருந்து, மாத்திரைகள் இன்றி சிகிச்சை அளிப்பதுதான், எங்களது இயன்முறை மருத்துவத்தின் சிறப்பம்சமாகும். கிளினிக் வர இயலாதவர்கள் அழைக்கும் பட்சத்தில், வீட்டுக்கு நேரில் வந்து சிகிச்சை அளிக்கிறோம். கிளினிக், தினமும் காலை, 10 முதல் மதியம், 1 மணி வரையும், மாலை, 5 முதல், 9 மணி வரை செயல்படும். தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள்: 98427 78590, 97515 05420, 97870 49720.


