கிணற்றில் விழுந்து இரு மாணவர்கள் பலி
கிணற்றில் விழுந்து இரு மாணவர்கள் பலி
கிணற்றில் விழுந்து இரு மாணவர்கள் பலி
ADDED : ஜூலை 12, 2011 12:19 AM

தாடிக்கொம்பு : திண்டுக்கல் அருகே இரண்டு பள்ளி மாணவர்கள்கிணற்றில் தவறி விழுந்து இறந்தனர்.
கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் மகன் அருள்நாதன் (8). அங்குள்ள காசு வள்ளுவன் நடுநிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார். இவரது வீட்டுக்கு நம்பிக்கோட்டையை சேர்ந்த உறவினர் குணசேகரன் மகன் புகழேந்தி (8) வந்தார். நேற்று முன்தினம் தோட்டத்திற்கு விளையாட சென்ற போது, கிணற்றில் தவறி விழுந்தனர். உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று, இருவரின் உடலும் கிணற்றில் மிதந்தது. தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.