/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வீட்டின் கதவை உடைத்து 10 லட்ச ரூபாய் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளைவீட்டின் கதவை உடைத்து 10 லட்ச ரூபாய் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து 10 லட்ச ரூபாய் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து 10 லட்ச ரூபாய் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து 10 லட்ச ரூபாய் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
ADDED : ஆக 29, 2011 11:16 PM
அம்பத்தூர் : பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, 10 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பத்தூர் அடுத்த வெங்கடாபுரம் தெற்கு பூங்கா தெருவைச் சேர்ந்தவர் கேசவன். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின். தமிழக மாநிலச் செயலராக இருந்தவர், கடந்த வருடம் காலமாகி விட்டார். இவரின் மனைவி உஷா,55. கடந்த 16ம் தேதி உஷா, மதுரையில் உள்ள தன் மகள் வீட்டிற்குச் சென்று விட்டார். வீட்டின் சாவியை உஷா அருகில் உள்ள தம்பி தேவராஜ் வீட்டில் கொடுத்திருந்தார். தினமும் அவர் காலை, மாலை நேரங்களில் வீட்டிற்கு வந்து பார்வையிட்டுச் செல்வார். இந்நிலையில், நேற்று காலை உஷாவின் தம்பி தேவராஜ் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 20 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து, அம்பத்தூர் போலீசில் தேவராஜ் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, வீட்டின் கதவை உடைத்து, 10 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடித்துச் சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.